வேளாண் தொழிலின் வகைகள்
வேளாண்வகை என்பது ஒருங்கிணைப்புத் தன்மையயும், வேளாண்மையைக் கையாளும் முறையினையும், அங்கு விளையும் பயிரையும் பொறுத்துக் கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படுகின்றன
§ தன்னிறைவு வேளாண்மை
§ மாற்றிடவேளான்மை
§ தீவிர வேளாண்மை
§ வணிகவேளாணமை
§ பரந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் வேளாண்மை
§ கலப்புவேளாண்மை
தன்னிறைவு வேளாண்மை
இம்முறையில் விவசாயிகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தேவையான அளவு பயிர்களை விளைவிப்பர். தன்னிறைவு வேளாண்மை இரு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. அவை எளிய தன்னிறைவு வேளாணமை மற்றும் தீவிர தன்னிறைவு வேளாண்மை என்பதாகும். எளிய தன்னிறைவு வேளாண்மை முறை மலைவாழ் மக்களுள் சிறிய குழுமங்களாள் மேற்கொள்ளப்படும் வேளாண் முறையாகும்.
மாற்றிட வேளாண்மை
மாற்றிட வேளாண்மை எனபது இடப்பெயர்வு வேளாண்மை எனவும் அழைக்கப்படுகிறாது. விவசாயிகள் தங்களின் ஒரு சிறிய பகுதியில் உள்ள மரங்களை வெட்டி எறிந்துவிட்டு மரங்களை எரித்து அப்பகுதிகளில் திணை வகைகள் மற்றும் கிழங்குகள் போன்ற எளிய பயிர்களை வளர்ப்பர். சில வருடங்களுக்குப் பிறகு அந்த நிலங்களை விட்டுவிட்டு காட்டில் மற்றொரு பகுதியை தேர்ந்தெடுத்து மேற்கூறிய முறையில் விவசாயம் மேற்கொள்வர். பின்னர் இந்த நிலம் காடுகள் மீண்டும் வளர்வதற்கென்று தரிசாக விடப்படும், விவசாயிகள் புதிய நிலத்திற்கு இடம்பெயர்ந்து, பல ஆண்டுகளுக்குப் (10-20) பிறகு திரும்பி வருவார்கள். இந்த தரிசு காலகட்டம் மக்கள்தொகை அடர்த்தி அதிகரித்தால் குறுகிவிடுவதோடு ஊட்டச்சத்துக்கள் (உரங்கள்) அளிப்பு அல்லது எரு மற்றும் சில கைமுறையான பூச்சிக் கட்டுப்பாட்டை கோருகிறது. மாற்றிட வேளாண்தொழில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களுடன் அழைக்கப்படுகிறாது. பிரேசில்|பிரேசிலில் ரோக்கோ எனவும், மில்பா என மத்திய அமெரிக்காவிலும், ஜூம்,பேவார் மற்றும் போடா என இந்தியாவிலும் அழைக்கப்படுகிறாது.
தீவிர வேளாண்மை
மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள பருவமழை பெறும் ஆசியப்பகுதிகளில் இம்முறை காணப்படுகிறது. நெற்பயிரே அதிகமாக இம்முறையில் விளைவிக்கப்படும் பயிராகும். விளைநிலம் சிறியதாக இருந்தாலும் அவற்றில் விவசாயிகள் தீவர வேளாண் சாகுபடி செய்வர். உரங்கள், அதிக மகசூல் தரும் உயர்ரக விதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், குடும்பத்திலுள்ளவர்களையே பெரும்பாலும் வேளாண்மையில் ஈடுபடுத்தியும், விளைநிலத்தை ஒருபோதும் வெற்றாக விடாமலும் தீவிர முறையில் பயிர் விளைப்பர். இதனால் பயிர் மகசூல் அதிகமாக இருக்கும்.
வணிக வேளாண்மை
இவ்வகை வேளாண்மை பரந்த வேளாண்மை எனப்படுகிறது.இவ்வகையில் பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. பயிரிடுவதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோதுமை இம்முறையில் அதிகம் பயிரிடப்படும் பயிராகும். ஆனால் மகசூல் குறைவாகவே இருக்கும். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா போன்ற பகுதிகளில் இம்முறை வெகுவாகக் காணப்படுகிறது.
தோட்டப்பயிர்கள்
தோட்டப்பயிர்கள் அயனமண்டலப் பகுதிகளில் பெரிய நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் முறையாகும். அதிகம் முதலீடு செய்யப்பட்டு தேயிலை, காப்பி.இரப்பர் போன்ற பயிர்களை மட்டுமே விளைவிப்பதைக் கருத்தாகக் கொண்டு விளைவிக்கும் முறை இதுவாகும். இவ்வகைப் பயிர்கள் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பயனளிப்பதாக உள்ளது. தோட்டப்பயிர்வேளாணமை இலங்கை, மலேசியா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பல நாடுகளில் காணப்படுகிறது.
கலப்புப் பண்ணை
கலப்புப்பண்ணை வேளாண் முறை ஒரு சிறந்த வேளாண்முறையாகும். ஏனெனில் இதில் பயிர் விளைவித்தல் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய இரண்டும் நடைபெறுகிறது. இவ்வகை வேளாண்மை உலகில் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் இதகைய கலப்புப் பண்ணைமுறை ஒரு பொதுவான வேளாண்தொழிலாகும்.
No comments:
Post a Comment