நவீன வேளாண்மையின் தீமைகள்
இன்றைய இரசாயன வேளாண் முறையில் அதிக மகசூல் மற்றும் லாபம் இருந்தாலும் அவை பாதகமானது என்பது தவிர்க்க முடியாதது. அவற்றுள் சில,
§ அதிக ரசாயனங்களை பயன்படுத்துவதாலும், பயிர்சுழற்சி செய்யாததாலும், நிலத்தின் ஊட்டச்சத்து அளவு குறைந்து வருகிறது.
§ மண்ணின் இயற்கை தன்மையை அழிக்கும் செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கின்றனர்
§ இரசாயன உரங்களில் இருக்கும் நைட்ரேட்(தழைச்சத்து) மழையினால் அடித்து செல்லப்பட்டு குடிநீரை அசுத்தப்படுத்துகிறது
§ அதிக மறை ஆழமான உழவு செய்தலினால் மேல்மட்டத்தில் உள்ள மண் அரித்து செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது
§ மண்ணின் அமைப்பு மிகவும் சேதம் அடைந்து வருகிறது. டிராக்டர் பயன்படுத்தி உழுவதால் மண்ணின் அமைப்பு மாறி இறுகிய நிலை ஏற்பட்டுவருகிறது
§ இரசாயனப் பொருட்களால் உணவு மாசுபடுதல் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இது சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மிகவும் மாசுபடுத்தப்படுகிறது
No comments:
Post a Comment