Saturday, 24 March 2012

பற்றி எரிகிறது மலை

”உயிர் நாவில் உருவான 
உலகமொழி 
நம் செம்மொழியான 
தமிழ் மொழியே 

மென்மையும் தொன்மையும் 
கலந்த தாய் மொழியே 
நீ தானே தனித்து தவழும் 
தூய மழலை தேன் மொழியே 

இலக்கண செம்மையில் 
வரம்பே இல்லா 
வாய் மொழியே 

மும்மை சங்கத்தில் 
முறை சாற்றும் 
இயற்கை மொழியே 

இலக்கண பொருளின் 
அணிச்சிறப்பாய் அளவெடுத்த 
செய்யுள் மொழியே 
நம் தாய் மொழியாம்”



60களில் ஜவஹர்லால் நேரு, ஜவுளி நூற்பாலைத் திறப்பிற்காக தேனிக்கு வந்தார்அவரின் வருகை சிறப்புக் கொண்டாட்டமாகவே இருந்தது.இன்றும் என் ‘வயதான நண்பர்கள்’ புளகாங்கிதமடைந்து மலரும் நினைவுகளுக்குள் நுழைந்து மகிழும் ஒரு நிகழ்ச்சியாகவே இருந்து வருகிறதுஅவரது சிகப்பு நிறம், மலர் மாலைகளை வாங்கி மீண்டும் லாவகமாய் குழந்தைகள் மீது விழும்படி எறிந்த யுக்தி, அப்போது தயாரான சமையல் எனபல விஷயங்கள் வரலாற்று நிகழ்வுகளாய் அவர்களது மனதில் நிலைத்துவிட்டன.
போடிமெட்டு வழியாக மூணாறு சென்ற நேரு அதன் அழகிலும்நேர்த்தியிலும் மயங்கி அப்பகுதியை ஏழைகளின் சுவிட்சர்லாந்து’ எனப் பட்டம் அளிக்கும் அளவிற்குக் சென்றுவிட்டார்இன்று இந்த ஏழைகளின் சுவிட்சர்லாந்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறதுஇந்தியாவின் மிக நீண்ட மலைத் தொடரான மேற்கு மலைத்தொடர் அரைவட்ட வடிவில் அமைந்து தமிழ் நாட்டை ஓர் அரண் போல் காத்து வருகிறதுஇதன் அடர்ந்த காடுகள் தமிழ் நாட்டில் உள்ள காடுகளில் 7% பங்கு அளிக்கிறதுஇங்கமைந்துள்ள பெரியார் வன சரகத்தில் அரிய வன விலங்குகள்பறவைகள் உட்பட 34,000க்கு மேல் உள்ளதாக வனத்துறை கணக்கெடுப்பு கூறுகிறதுஅடர்ந்த காடுகள் அழிவுருவதும்பருவ மழை பொய்ப்பதும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் போடிமெட்டு மலைப்பகுதி என்னை மிகவும் பாதிக்கச் செய்தது.கிட்டதட்ட 10 கிலோ மீட்டர் வனப்பகுதி தீக்கிரையானதுலட்சக்கணக்கான மதிப்புள்ள வயதான மரங்கள் கருகிப்போயினவன விலங்குகளின் வாழ்விடம் அழிந்துபோனதுகாடைகவுதாரிகாட்டுப்புறாகாட்டுக்கோழி போன்ற சிறு பறவைகள் திணறிப்போயினமார்ச் முதல் அக்டோபர்வரை அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் காலம்மலைத்தீயால் அவை வயல் வெளிகளில் தஞ்சம் அடைந்தனஇதைக் கவனித்த ஒரு கும்பல் அவைகளைப் பிடித்துக் கொன்று கீரைக் கட்டுபோல விற்றுச் சென்றனர்இந்த அவலம் போடி,ராசிங்காபுரம்தேவாரம் பகுதிகளில் அரங்கேறியதுசென்ற வருடத் துவக்கத்தில்தான் இப்பறவைகள் அழியும் நிலையில் உள்ளதாக அரசால் அறிவிக்கப்பட்டது.
தென் தமிழ் நாட்டில் கரும்பு விவசாயிகள் அதன் தோகைகளையும்மக்காச் சோள விவசாயிகள் அதன் வேர்ப் பகுதியையும் எரிக்கும் பழக்கம் உள்ளது.அப்போது வைக்கப்படும் தீஅதனால் உண்டாகும் புகை மண்டலம் ஓசோனில் ஓட்டை போடும் அளவிற்கு இருக்கும்.
2004இல் ஏற்பட்ட இமாலய மலைத் தொடர் தீ விபத்து ‘நாசா’ தெரிவித்துதான் நமக்கே தெரிந்ததுபஞ்சாப், ஹரியானா விவசாயிகள் வயல்வெளி குப்பைக்குத் தீயை வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.இந்தத் தீ வயல்வெளி வழியாக இமாலயத் தொடரைத் தொட்டு உலகை அதிர வைத்ததுஆயிரக்கணக்கான விலங்குகளும், பறவைகளும், மரங்களும் அழிந்து போயினபுவியும் வெப்பமடைந்தது.
மலைத்தீயும்வனத்தீயும் பொதுவாக பெரும் பாதிப்பையும்சுற்றுப்புறச் சூழலை அழிப்பதாகவும் விஞ்ஞானபூர்வமாகக் கருதப்படுகிறதுஆக்ஸிஜன் அதிகளவு உறிஞ்சப்பட்டு கார்பன் டை ஆக்ஸைடு உருவாகிறதுஉபரியாக நைட்ரஜனும்கார்பன் மோனாக்ஸைடும் உருவாகிறதுஇது படலம் போல் விரவிப் பரவுகிறதுமனிதர்களுக்கு மூச்சுத் திணறலை உருவாக்குவதும்,விதைகளில் முளைப்புத் திறனை அழிப்பதும்பறவை முட்டைகளில் கரு உருவாக்கத்தைத் தடுப்பதும் தீயின் முக்கிய வேதி வினைகளாகும்.இந்நிலையில் மட்டுமே சூரியக் கதிர்களில் உள்ள அல்ட்ரா கதிர்கள் பூமியை நேரிடையாகத் தாக்குகிறதுபூமி தன் உயிர்ச் சத்தை இழக்கிறது.
வனம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அரசு வன விழிப்புணர்வுக் குழுவை உருவாக்கியதுஅவர்களே வனத்திற்குத் தீ வைத்த சம்பவம் நம் மாநிலத்தில் நடந்தது.பாபநாசம்முண்டன்துறை வனப்பகுதி தீயால் வெந்த போது முதலில் பலத்த காற்று காரணமாய்க் கூறப்பட்டது.பின்னர் சுற்றுலாப் பயணியரின் சிகரெட் தீ என்றனர்அரசு விசாரணைக் குழு அமைத்ததுஅவர்கள் வனக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் ஊழல் நடை பெற்றுள்ளதுபாதிக்கப்பட்டவர்கள் காட்டிற்குத் தீ வைத்து தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை இந்த அரசிற்குத் தெரிவித்ததாகஅறிக்கை கூறியது.
மரம் வெட்டத் தடை விதித்ததால் காமராஜர் அணைக்கட்டு வனப்பகுதி தீ வைத்து கொளுத்தப்பட்டதுகொடைக்கானல் தீ விபத்தும்குற்றால மலையில் ஏற்பட்ட தீ விபத்தும் நம்மை நாமே நொந்து கொள்ளும் வகையில் அமைந்தது.காரணம் என்னவோ சுற்றுலாப் பயணியரின் சிகரெட் மீதே சுமத்தப்பட்டது.கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் எரிந்த தீயை வனத் துறையினரும்,தீயணைப்புத் துறையினரும் அணைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.போதுமான உபகரணங்கள் எங்கள் இடத்தில் இல்லை என்றனர்கடைசி நிமிடத்தில் மரக்கிளைகளையே ஒடித்து தூசி தட்டுவது போல தீயை அணைக்க முயன்று தோற்று வெளியேறினர்பவானி சாகர் அணைக்கட்டின் காட்டுப்பகுதித் தீ விபத்து யானைகளை மிரளச் செய்து அணைக்கட்டுப் பகுதிகளையே சேதம் செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றது.
வருச நாட்டுக் காட்டுப்பகுதி கஞ்சாப் பயிர் நிரம்பிய பகுதிவனத்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் கோபம் அடைந்த சட்ட விரோதக் கும்பல் காட்டிற்குத் தீ வைத்து அவர்களைக் கொல்ல முயன்றனர்பாதுகாக்கப்பட்ட அவ் வனப் பகுதியில் இருந்த புள்ளிமான்கடமான்காட்டுமுயல்காட்டுப்பறவைகள்,வயதான பாம்பினங்கள்புள்ளி ஆந்தை போன்றவை மடிந்தன.
கணேசபுர வேட்டை கும்பல் தங்கள் நாய்களோடு இரவு வேளைகளில் காட்டிற்குள் புகுந்து காட்டையே நாசமாக்குகின்றனர்இவர்கள் வைத்த தீ,யானைகளின் வழித்தடத்தை மாற்றிவிடுகிறதுஇவர்களுக்குப் பயந்து அவை பல கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணிக்க நேருகிறதுதற்போதுதான் இப்பகுதி முழுவதும் ஆண் யானைகளின் பாதுக்காக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவ மழை தற்போது பொய்த்துவிட்டதுசோத்துப்பாறை உள்ளிட்ட பல சிறிய அணைகள் வறண்டுவிட்டனசூரிய வெப்பம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதுஇயற்கையாகவே மலைப்பகுதியும்வனப்பகுதியும் வறண்டு காணப்படுகிறதுகாற்றின் உரசலில் தீப்பிடிக்கும் சூழலில் சுற்றுலா செல்வோரும்மேய்ச்சலுக்காகச் செல்வோரும் மிகக் கவனத்தோடும்விழிப்புணர்வோடும் இயங்க வேண்டும்ஒரு முறை இழந்தாலும் இழந்த இயற்கை வளத்தை மீண்டும் மீட்டெடுக்கவே முடி

No comments:

Post a Comment