Saturday, 24 March 2012

பற்றி எரிகிறது மலை

”உயிர் நாவில் உருவான 
உலகமொழி 
நம் செம்மொழியான 
தமிழ் மொழியே 

மென்மையும் தொன்மையும் 
கலந்த தாய் மொழியே 
நீ தானே தனித்து தவழும் 
தூய மழலை தேன் மொழியே 

இலக்கண செம்மையில் 
வரம்பே இல்லா 
வாய் மொழியே 

மும்மை சங்கத்தில் 
முறை சாற்றும் 
இயற்கை மொழியே 

இலக்கண பொருளின் 
அணிச்சிறப்பாய் அளவெடுத்த 
செய்யுள் மொழியே 
நம் தாய் மொழியாம்”



60களில் ஜவஹர்லால் நேரு, ஜவுளி நூற்பாலைத் திறப்பிற்காக தேனிக்கு வந்தார்அவரின் வருகை சிறப்புக் கொண்டாட்டமாகவே இருந்தது.இன்றும் என் ‘வயதான நண்பர்கள்’ புளகாங்கிதமடைந்து மலரும் நினைவுகளுக்குள் நுழைந்து மகிழும் ஒரு நிகழ்ச்சியாகவே இருந்து வருகிறதுஅவரது சிகப்பு நிறம், மலர் மாலைகளை வாங்கி மீண்டும் லாவகமாய் குழந்தைகள் மீது விழும்படி எறிந்த யுக்தி, அப்போது தயாரான சமையல் எனபல விஷயங்கள் வரலாற்று நிகழ்வுகளாய் அவர்களது மனதில் நிலைத்துவிட்டன.
போடிமெட்டு வழியாக மூணாறு சென்ற நேரு அதன் அழகிலும்நேர்த்தியிலும் மயங்கி அப்பகுதியை ஏழைகளின் சுவிட்சர்லாந்து’ எனப் பட்டம் அளிக்கும் அளவிற்குக் சென்றுவிட்டார்இன்று இந்த ஏழைகளின் சுவிட்சர்லாந்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறதுஇந்தியாவின் மிக நீண்ட மலைத் தொடரான மேற்கு மலைத்தொடர் அரைவட்ட வடிவில் அமைந்து தமிழ் நாட்டை ஓர் அரண் போல் காத்து வருகிறதுஇதன் அடர்ந்த காடுகள் தமிழ் நாட்டில் உள்ள காடுகளில் 7% பங்கு அளிக்கிறதுஇங்கமைந்துள்ள பெரியார் வன சரகத்தில் அரிய வன விலங்குகள்பறவைகள் உட்பட 34,000க்கு மேல் உள்ளதாக வனத்துறை கணக்கெடுப்பு கூறுகிறதுஅடர்ந்த காடுகள் அழிவுருவதும்பருவ மழை பொய்ப்பதும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் போடிமெட்டு மலைப்பகுதி என்னை மிகவும் பாதிக்கச் செய்தது.கிட்டதட்ட 10 கிலோ மீட்டர் வனப்பகுதி தீக்கிரையானதுலட்சக்கணக்கான மதிப்புள்ள வயதான மரங்கள் கருகிப்போயினவன விலங்குகளின் வாழ்விடம் அழிந்துபோனதுகாடைகவுதாரிகாட்டுப்புறாகாட்டுக்கோழி போன்ற சிறு பறவைகள் திணறிப்போயினமார்ச் முதல் அக்டோபர்வரை அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் காலம்மலைத்தீயால் அவை வயல் வெளிகளில் தஞ்சம் அடைந்தனஇதைக் கவனித்த ஒரு கும்பல் அவைகளைப் பிடித்துக் கொன்று கீரைக் கட்டுபோல விற்றுச் சென்றனர்இந்த அவலம் போடி,ராசிங்காபுரம்தேவாரம் பகுதிகளில் அரங்கேறியதுசென்ற வருடத் துவக்கத்தில்தான் இப்பறவைகள் அழியும் நிலையில் உள்ளதாக அரசால் அறிவிக்கப்பட்டது.
தென் தமிழ் நாட்டில் கரும்பு விவசாயிகள் அதன் தோகைகளையும்மக்காச் சோள விவசாயிகள் அதன் வேர்ப் பகுதியையும் எரிக்கும் பழக்கம் உள்ளது.அப்போது வைக்கப்படும் தீஅதனால் உண்டாகும் புகை மண்டலம் ஓசோனில் ஓட்டை போடும் அளவிற்கு இருக்கும்.
2004இல் ஏற்பட்ட இமாலய மலைத் தொடர் தீ விபத்து ‘நாசா’ தெரிவித்துதான் நமக்கே தெரிந்ததுபஞ்சாப், ஹரியானா விவசாயிகள் வயல்வெளி குப்பைக்குத் தீயை வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.இந்தத் தீ வயல்வெளி வழியாக இமாலயத் தொடரைத் தொட்டு உலகை அதிர வைத்ததுஆயிரக்கணக்கான விலங்குகளும், பறவைகளும், மரங்களும் அழிந்து போயினபுவியும் வெப்பமடைந்தது.
மலைத்தீயும்வனத்தீயும் பொதுவாக பெரும் பாதிப்பையும்சுற்றுப்புறச் சூழலை அழிப்பதாகவும் விஞ்ஞானபூர்வமாகக் கருதப்படுகிறதுஆக்ஸிஜன் அதிகளவு உறிஞ்சப்பட்டு கார்பன் டை ஆக்ஸைடு உருவாகிறதுஉபரியாக நைட்ரஜனும்கார்பன் மோனாக்ஸைடும் உருவாகிறதுஇது படலம் போல் விரவிப் பரவுகிறதுமனிதர்களுக்கு மூச்சுத் திணறலை உருவாக்குவதும்,விதைகளில் முளைப்புத் திறனை அழிப்பதும்பறவை முட்டைகளில் கரு உருவாக்கத்தைத் தடுப்பதும் தீயின் முக்கிய வேதி வினைகளாகும்.இந்நிலையில் மட்டுமே சூரியக் கதிர்களில் உள்ள அல்ட்ரா கதிர்கள் பூமியை நேரிடையாகத் தாக்குகிறதுபூமி தன் உயிர்ச் சத்தை இழக்கிறது.
வனம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அரசு வன விழிப்புணர்வுக் குழுவை உருவாக்கியதுஅவர்களே வனத்திற்குத் தீ வைத்த சம்பவம் நம் மாநிலத்தில் நடந்தது.பாபநாசம்முண்டன்துறை வனப்பகுதி தீயால் வெந்த போது முதலில் பலத்த காற்று காரணமாய்க் கூறப்பட்டது.பின்னர் சுற்றுலாப் பயணியரின் சிகரெட் தீ என்றனர்அரசு விசாரணைக் குழு அமைத்ததுஅவர்கள் வனக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் ஊழல் நடை பெற்றுள்ளதுபாதிக்கப்பட்டவர்கள் காட்டிற்குத் தீ வைத்து தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை இந்த அரசிற்குத் தெரிவித்ததாகஅறிக்கை கூறியது.
மரம் வெட்டத் தடை விதித்ததால் காமராஜர் அணைக்கட்டு வனப்பகுதி தீ வைத்து கொளுத்தப்பட்டதுகொடைக்கானல் தீ விபத்தும்குற்றால மலையில் ஏற்பட்ட தீ விபத்தும் நம்மை நாமே நொந்து கொள்ளும் வகையில் அமைந்தது.காரணம் என்னவோ சுற்றுலாப் பயணியரின் சிகரெட் மீதே சுமத்தப்பட்டது.கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் எரிந்த தீயை வனத் துறையினரும்,தீயணைப்புத் துறையினரும் அணைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.போதுமான உபகரணங்கள் எங்கள் இடத்தில் இல்லை என்றனர்கடைசி நிமிடத்தில் மரக்கிளைகளையே ஒடித்து தூசி தட்டுவது போல தீயை அணைக்க முயன்று தோற்று வெளியேறினர்பவானி சாகர் அணைக்கட்டின் காட்டுப்பகுதித் தீ விபத்து யானைகளை மிரளச் செய்து அணைக்கட்டுப் பகுதிகளையே சேதம் செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றது.
வருச நாட்டுக் காட்டுப்பகுதி கஞ்சாப் பயிர் நிரம்பிய பகுதிவனத்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் கோபம் அடைந்த சட்ட விரோதக் கும்பல் காட்டிற்குத் தீ வைத்து அவர்களைக் கொல்ல முயன்றனர்பாதுகாக்கப்பட்ட அவ் வனப் பகுதியில் இருந்த புள்ளிமான்கடமான்காட்டுமுயல்காட்டுப்பறவைகள்,வயதான பாம்பினங்கள்புள்ளி ஆந்தை போன்றவை மடிந்தன.
கணேசபுர வேட்டை கும்பல் தங்கள் நாய்களோடு இரவு வேளைகளில் காட்டிற்குள் புகுந்து காட்டையே நாசமாக்குகின்றனர்இவர்கள் வைத்த தீ,யானைகளின் வழித்தடத்தை மாற்றிவிடுகிறதுஇவர்களுக்குப் பயந்து அவை பல கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணிக்க நேருகிறதுதற்போதுதான் இப்பகுதி முழுவதும் ஆண் யானைகளின் பாதுக்காக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவ மழை தற்போது பொய்த்துவிட்டதுசோத்துப்பாறை உள்ளிட்ட பல சிறிய அணைகள் வறண்டுவிட்டனசூரிய வெப்பம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதுஇயற்கையாகவே மலைப்பகுதியும்வனப்பகுதியும் வறண்டு காணப்படுகிறதுகாற்றின் உரசலில் தீப்பிடிக்கும் சூழலில் சுற்றுலா செல்வோரும்மேய்ச்சலுக்காகச் செல்வோரும் மிகக் கவனத்தோடும்விழிப்புணர்வோடும் இயங்க வேண்டும்ஒரு முறை இழந்தாலும் இழந்த இயற்கை வளத்தை மீண்டும் மீட்டெடுக்கவே முடி

Thursday, 22 March 2012

நெல்லியின் மருத்துவப் பயன்கள்



நெல்லியின் மருத்துவப் பயன்கள்
மூலிகையின் பெயர் -: நெல்லி.
தாவரப்பெயர் -: EMBILICA OFFICINALLIS.
தாவரக் குடும்பம் -: EUPHORBIACEAE.
வகைகள் -:
            பி.எஸ்.ஆர் 1, காஞ்சன் என் ஏ 7கிருஷ்ணா சக்கையா, மற்றும் கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.
வேறு பெயர்கள் -:
            அம்லா, ஆமலகம், கோரங்கம்,மிருதுபாலா.
பயன்தரும் பாகங்கள் -:
            இலை, பட்டை.வேர்,காய்,பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் வேர்பட்டை,விதை முதலியன.
வளரியல்பு -:
            இந்தியாவில் எங்கும் காணக்கிடைக்கும். 800 மீட்டர் உயரம் வரை மலைகளில் நன்றாக விளையும். மற்ற நிலங்களில் சுமாராகவிளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக்கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும், அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக்காயகளையும் உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றுள்ளது. இலையடி செதில் மிகச்சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும் கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும். பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண்  பூக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு. பூ விதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பல வீனப் பட்டதாக இருக்கும். உருண்டைவடிவமானது. சதைப்பற்றுள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்றுகோணங்கள் உடையது. விதையுறைக் கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய் விடும், மற்றவை 6 வருடங்கள் கூட ஆகும்.இது விதைமூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கும் செய்யப் படுகிறது.
மருத்துவப்பயன்கள் -:
1.      நெல்லியன் செய்கை, இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலத்தை இளக்கும். பழமும் சிறு நீரைப் பெருக்கி, மலக்காரியாகவும், சீதள காரியாகவும் செயல்படும்.
2.      நெல்லி காயகற்ப மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்கு கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார் இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது.
3.      மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60
4.      வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
5.      நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.
6.      இதன் இலைக்கொழுந்து ஒரு கைப்பிடி அளவிற்று எடுத்து, அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
7.      நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய்ஒன்றரை லிட்டர் கலந்து அதிமதுரம், ஏலம், கோஸ்டம், பூலாங்கழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, திருகடுகு, தான்றிக் காய், கடுக்காய், வகைக்கு 15 கிராம்தூள் செய்து கலந்து பதமுறக் காய்ச்சி வடிகட்டி (நெல்லித்தைலம்) வாரம் 2 முறை தலை முழுகி வர கண்காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் தீரும்.
8.      2 கிலோ வற்றலை 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி இறுத்து அரைக் கிலோ சர்கரை சேர்த்துப் பாகாக்கி அதில்திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெள்ளைக் குங்கிலியம்,கற்பூரம், வாயய் விளங்கம், அதிமதுரம், கூகைநீறு, கொத்த மல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டுக் கிளறி அரைலிட்டர் நெய் சேர்த்துக் காலை, மாலை கழற்சிக்காய் அளவு சுவைத்து பால் அருந்த மேகசூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல்என்புருக்கி, இருமல், ஈழை, காசம், கபம்,வாயு, பீ னிசம், பொருமல் அனைத்தும் தீரும்.
9.      நெல்லி இலையை நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும்.
10.  வேர்ப் பட்டையைத் தேனில் உரைத்துத் தடவ நாக்குப் புண் குணமாகும்.
11.  நெல்லி வற்றலும் பச்சைப்பயறும் வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக்காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக காலை,மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கோதிப்பு தீரும்.
12.  15 கிராம் நெல்லிக் காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி 20 மி.லி.தேன் கலந்து 40 மி.லி.யாக 3 வேளை4 நாள் சாப்பிட மிகு பித்தம் தணியும்.
13.  ''சுத்தசுரம் தோலாப் பெரும் வாந்திபித்தசந்தி பாதமிசை பேருங்காண்-மெத்தமணம்நாறு மயர்க்கூந்துன்பின்னே காவும் இனிமை யெனக்கூறுமரு நெல்லியின் வேர்க்கு''
14.  அரு நெல்லிச் சாற்றால் வெள்ளை படுதல் குணமாகும். வாந்தி நிற்கக் கொடுக்கலாம்.இதன் வடகத்தை துவையலாக வழங்க உடல் குளிர்ச்சி உண்டாகும். கண் ஒளிபெறும், காமாலை நீங்கும், பித்தம் போகும். மலமிழகும்.

சந்தனத்தின் மருத்துவப்பயன்கள்


சந்தனத்தின் மருத்துவப்பயன்கள்
மூலிகையின் பெயர் -: சந்தனம்.
 தாவரப் பெயர் -: SANTALUM ALBUM.
 தாவரக்குடும்பம் -: SANTALACEAE.
 வேறு பெயர்கள் -: முருகுசத்தம் என அழைப்பர்.
 ரகங்கள் -:
            வெள்ளை, மஞ்சளை சிவப்பு என மூன்று வகைகைள் உள்ளன. அதில் செஞ்சந்தனம் மருந்தாகப் பயன்படுகிறது.
பயன் தரும் பாகங்கள் -: சேகுக்கட்டை மற்றும் வேர்.
வளரியல்பு -:
            தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகளை யுடைய மரம். இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும். இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.
மருத்துவப்பயன்கள் -:
1.      சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.
2.      முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.
3.      கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.
4.      பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.
5.      சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலிவுறும்.
6.      சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.
7.      மருதாணி விதை, சந்தனத்தூள் கலந்து சாம்பிராணிப் புகைபோல் போட பேய் பிசாசு விலகும்.
8.      நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர மதுமேகம் தீரும்.
9.      சந்தன எண்ணெய்-தைலம் -எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்